Published : 29 Jul 2017 04:08 PM
Last Updated : 29 Jul 2017 04:08 PM
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் அருகேவுள்ள செட்கி பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், "பாகிஸ்தான் - இரான் எல்லையில் அமைந்துள்ள செட்கி பகுதியில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் செட்கி பகுதி தீவிரவாதத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழும் பகுதியாகும் இதனால் இப்பகுதி பதற்றம் மிக்க பகுதியாக அறியப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT