Last Updated : 29 Jul, 2017 12:47 PM

 

Published : 29 Jul 2017 12:47 PM
Last Updated : 29 Jul 2017 12:47 PM

ரூ.24.5 கோடி கடனில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட சீனப்பெண்

கடனில் இருந்து தப்பிப்பதற்காக சீனப் பெண் ஒருவர், பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட விவரம் சீன ஊடகமான சினுவாவில் வெளியாகியுள்ளது.

59 வயது சீனப் பெண் ஜூ நாஜூவான். இவர் சீனாவின் வூஹான் நகரத்தில் வசித்து வந்தவர். சொந்தக் காரணங்களுக்காக வங்கிகளிடம் இருந்து சுமார் ரூ.24.5 கோடி கடன் பெற்றிருந்தார்.

உரிய காலத்தில் கடனை நாஜூவானால் கட்ட முடியாத நிலையில், அவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என வூஹான் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கடன் கட்டுவதில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன் முகத்தை மாற்றிக் கொண்டு தென்கிழக்கு சீன நகரத்துக்குத் தப்பிச் சென்றார் ஜூ நாஜூவான்.

இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போது, ''நாங்கள் கைது செய்த பெண் 30 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். எங்களிடம் இருந்த புகைப்படத்துக்கும், நேரில் பார்த்தவருக்கும் வித்தியாசம் இருந்தது. நாங்கள் இது எப்படி நிகழ முடியும் என்று ஆச்சரியப்பட்டோம்'' என்றனர்.

இதுகுறித்துப் பேசிய ஜூ நாஜூவான், நாடு முழுக்கவும் ரயிலில் பயணிக்க மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாகவும், வங்கிக் கடன் அட்டைகள் மூலம் பிளாஸ்டிக் சர்ஜரிக்குத் தேவையான செலவுகளைச் சமாளித்ததாகவும் கூறினார்.

சீனாவின் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் கடந்த ஜூலை மாதம் புதிய அறிவிப்பு வெளியானது. அதில் நாட்டின் ஜிடிபியை அதிகரிக்க நுகர்வோர்களுக்கு ஏராளமான கடன் அட்டைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் ஏராளமான பொதுமக்கள் தற்போது கடனாளிகளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x