Published : 04 Jul 2017 12:02 PM
Last Updated : 04 Jul 2017 12:02 PM
கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் படைத்த அதிநவீன ஏவுக ணையை ஏவி சோதித்து பார்த்தது வடகொரியா. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சோதனை களை நிறுத்திக் கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபை மூலம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும் வடகொரியா தனது நிலைப் பாட்டில் உறுதியாக உள்ளது.
இதன் காரணமாக தென் கொரியா கடல் பகுதியில், அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. தவிர, போர் பயிற்சியிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரியா நேற்று தெரிவித் துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வல்லுநர்கள் கூறும் போது, ‘‘அந்த ஏவுகணை அலாஸ்கா வரை சென்று தாக்கும் திறன் படைத்தது’’ என்கின்றனர்.
‘வசாங்-14’ என பெயரிடப்பட் டுள்ள இந்த ஏவுகணை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் சோதித்து பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வட கொரிய தொலைக் காட்சியின் பெண் தொகுப்பாளர் ஒருவர் கூறும்போது, ‘‘இந்த ஏவுகணை 2,802 கி.மீ உயரத்தில் பறந்தபடி, 933 கி.மீ தூரம் வரை சென்றது. வடகொரியா வலிமை யான அணு ஆயுத நாடாகிவிட்டது. உலகின் எந்தவொரு நாட்டையும் தாக்கும் திறன் படைத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வடகொரியாவிடம் இருக்கின்றன’’ என்றார்.
வடகொரியா சோதித்த இந்த ஏவுகணை ஜப்பானின் பொருளா தார மண்டலம் அமைந்திருக்கும் கடல் பகுதியில் விழுந்துள்ளதாக ஜப்பான் ராணுவ அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறும்போது, ‘‘அச்சுறுத்தல் அதிகமாகிவிட்டதை இந்த சோதனை சுட்டிக்காட்டுகிறது. ஜெர்மனியில் நடக்கும் ஜி 20 உச்சி மாநாட்டின்போது இப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் விவாதிக்கப் படும். வடகொரியா விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் எடுத்து வரும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன்’’ என்றார்.
இந்த சூழலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோத னையை வடகொரியா மீண்டும் நடத்தியிருப்பது, அமெரிக்காவை எரிச்சலடைய வைத்துள்ளது.
ஏவுகணை சோதனைக்கு ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித் துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘‘இத்தகைய முட்டாள்தனமான சோதனைகளை ஒட்டுமொத்தமாக முடித்துக் கொள்ளும்படி வடகொரியாவுக்கு சீனா அறிவுரை வழங்க வேண்டும்’’ என குறிப் பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT