Published : 30 Jul 2017 04:43 PM
Last Updated : 30 Jul 2017 04:43 PM
சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஸுவில் ஒரு காவல்நிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மொகாடிஸ்ஸுவில் வபேரி காவல் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல்மிக்க மக்கா அல்முகார்ரமா சாலையில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்று கேப்டன் முகமது ஹுசைன் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கிழக்கு ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் அல்-ஷபாப் தீவிரவாதக் கும்பல் அடிக்கடி இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதை ஒரு இலக்காக வைத்துள்ளனர். இவர்கள் சோமாலியாவில் கடந்த ஒரு மாதமாக எத்தகைய தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபடாமல் இருந்தனர். சோமாலியா தலைநகர் அமைதியாக இருந்த நிலையில் தற்போது இந்த குண்டுவெடிப்பு மீண்டும் நிகழ்ந்ததுள்ளது.
அல் கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர், பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் போன்ற பெரிய இலக்குகளை குறிவைத்து இத்தகைய கொடூரமான சம்பவங்களை
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். இந்தக் குண்டுவெடிப்பின் சரியான இலக்கு எதுவென்று தெளிவாக தெரியவில்லை. அருகிலுள்ள குறுக்குச் சாலை ஒன்றில் ராணுவ வீரர்களின் கார்களை அவர்கள் தேடி வந்திருக்கலாம். அப்போதுதான் பிரதான சாலையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இந்தக் கார் வெடித்துள்ளது என்றார் அவர்.
இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சோமலியா பிரதமர் அலி காய்ரே, ''கடந்த ஒரு மாதமாக இப்படியொரு சம்பவம் இங்கு நடைபெறவில்லை'' என கூறினார்.
குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மீட்புப் பணியாளர்களும் பொதுமக்களும் ரத்த வெள்ளத்தில் சிதறிய உடல்களையும் காயம்பட்டவர்களையும் மீட்டு மருத்துமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
2012ல் தொடங்கப்பட்ட அல்ஷபாப் இயக்கம் சோமாலியா மட்டுமின்றி ஏமனிலும் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT