Published : 07 Jul 2017 03:57 PM
Last Updated : 07 Jul 2017 03:57 PM
பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 பேர் பலியாகியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.
பிலிப்பைன்ஸில் லெய்ட் மாகாணத்தில் வியாழக்கிழமை மதியம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதாகவும் இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிலிப்பைன்ஸ் ராணுவ அதிகாரிகள் தரப்பில், "நிலநடுக்கம் ஏற்பட்ட லெட்ய் மாகாணத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். 4 பேரை காணவில்லை. பல கட்டிங்கள் சரிந்துள்ளன. அதில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்புப் பணிகள் விரைந்து நடந்து வருகிறது.
மேலும் பல இடங்கள் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
241 அதிர்வுகள்
வெள்ளிக்கிழமை முன்வரை பிலிப்பைன்சிஸ் மலைப் பிரதேசங்களில் 241 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து ஒர்மாக் நகர மேயர் கூறும்போது, "மலைப் பிரதேசங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் பலியாகியுள்ளார். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT