Published : 23 Jul 2017 06:33 PM
Last Updated : 23 Jul 2017 06:33 PM
சிரியா ராணுவம் கடந்த ஏப்ரலில் இருந்தே ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என பென்டகன் கூறியுள்ளது.
இதுகுறித்து பென்டகனின் இணை உயரதிகாரிகளின் தலைவர் ஜோசெஃப் டன்ஃபோர்ட்டு ஞாயிறு அன்று தெரிவித்துள்ளதாவது:
ஹோம்ஸ் நகரத்திற்கு அருகில் சிரிய ராணுவம் நடத்தப்பட்ட சம்பவத்தை ஐ.நா.சபை வெளிக்கொண்டுவந்தபோது, நாட்டுமக்கள்மீது அதிபர் அசாத் ரசாயன தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வந்தததற்குப் பின் அமெரிக்கா இந்த அறிக்கைகையை வெளியிட்டுள்ளது.
''தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதன் தவற்றை சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் உணர்ந்துவிட்டதாக நான் கருதுகிறேன். அதன் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்ட அந்த நாளுக்குப் பிறகு அவர் ரசாயன ஆயுதங்கள் பிரயோகிப்பதைத் தவிர்த்துவிட்டார்'' என ஸ்பட்னிக் கூறியுள்ளதை கோடிட்டுக் காட்டி டன்ஃபோர்டு கொலராடோவில் உள்ள ஆஸ்பென் செக்யூரிட்டு ஃபாரம்மில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
முன்னதாக ஏப்ரல் 7 ம் தேதி, அஷ் ஷாயிராட் விமானநிலையத்தில் மொத்தம் 59 டாமஹாக் குரூஸ் ஏவுகணைகளை அமெரிக்கா செலுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இத்தாக்குதல், இட்லிபில் இரசாயன ஆயுதங்களின் பயன்பாடு பஷார் அல்-அசாத்தின் அரசாங்கத்தை வாஷிங்டன் விமர்சத்ததிற்கு பதிலுருப்பதாக இருந்து என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஜோசப் டன்ஃபோர்ட் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், மேலும் 2013 ல் கிழக்கு கௌடா சாரின் வாயு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) அமைப்பின் மேற்பார்வைக்குள்ளாக சிரியாவில் உள்ள அனைத்து இரசாயன ஆயுதங்களும் அழிக்கப்பட்டன என்று நினைவூட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT