Published : 19 Jul 2017 12:00 PM
Last Updated : 19 Jul 2017 12:00 PM
சவுதியில் குட்டை பாவாடை அணிந்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண்ணை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் அரசு ஊடகமான எக்பரியா,
"வீடியோவில் அடையாளம் அறியப்படாத அப்பெண் குட்டை பாவடையுடன் ஒரு பழமையான சுவர்கள் அடங்கிய தெரு வழியே நடந்து செல்கிறார்.
அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காரணத்துக்காக தற்போது அப்பெண் ரியாத் போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பெயர் குறிப்பிடப்படாத அப்பெண்ணின் வீடியோவை சமூக வலைதளத்தில் அனைவரும் பகிர்ந்து இஸ்லாம் விதிமுறைகளை அவர் மீறிவிட்டதாக கடுமையாக சாடி வருகின்றனர்.
சவுதியில் பெண்களுக்கு எதிரான பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதில் முக்கியமானது, ஆடை கட்டுப்பாடு, வாகனம் ஓட்டுவதற்கு தடை போன்றவை. சவுதியில் பெண்களுக்கு எதிராக ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு அங்குள்ள பெண்கள் அமைப்புகள்தொடர்ந்து குரல் கொடுத்தும், போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியும் வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT