Published : 17 Jul 2017 09:50 AM
Last Updated : 17 Jul 2017 09:50 AM

அதிக வட்டியில் சிறுவணிக கடன்: புதைகுழியில் சிக்கிய இலங்கைத் தமிழர்கள்

வறுமை தாண்ட வமாடும் மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பு தமிழர்கள் கடன் என்ற புதைகுழி யில் சிக்கித் தவிக்கின்றனர்.

இலங்கையில் பெண்களின் பொருளாதார தேவைகளுக்கு தீர்வு கண்டு உதவிடும் வகையில் கிராமப்புற மகளிர் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஜேசுதாசன் ரஜிதா கூறும்போது, “முதலில் சுனாமி வந்து எங்கள் சமூகத்தை அழித்தது. அடுத்ததாக போர். இப்போது சிறு வணிக கடன் நிறுவனங்கள் எங்களை அழித்துக் கொண்டிருக்கிறது. கடன் சுமையால் மிகவும் சிரமப்படுவதாக அன்றாடம் யாராவது ஒருவர் என்னிடம் புலம்பிக் கொண்டுதான் உள்ளார்” என்றார்.

உள்நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு, கிழக்கு மாகாண கிராமப்புற மக்களின் கடன் சுமை அதிகமாகிவிட்டது. குறிப்பாக மிக வும் வறிய மாவட்டங்களில் ஒன் றான மட்டக்களப்பு பகுதி மக்கள் கடன் பிரச்சினையால் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு சராசரி மாதாந்திர குடும்ப வருமானம் வெறும் ரூ.2,630 (இலங்கை ரூபாயில் 6,270) ஆக உள்ளது.

போர் ஓய்ந்து இப்பகுதியில் இயல்புநிலை திரும்பிய நிலை யில், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதாகக் கூறி சிறுகடன் நிறுவனங்கள் இப்பகுதியில் நிறைய பெருகின. உண்மையில், அந்த நிறுவனங்கள் கடன் கலாச் சாரத்தையே ஊக்குவித்தன.

சிறுநீரகத்தை விற்க முடிவு

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவிக்கும் ராஜா (39) என்பவர் தனது சிறு நீரகத்தை விற்க முடிவு செய்துள் ளார். இதுகுறித்து ராஜா கூறும் போது, “எனது சிறுநீரகத்தை விற்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்களை அணுகி விசாரித்தபோது, ரூ.3.7 லட்சம் தருவதாகக் கூறினார் கள். ஆனாலும் என்னுடைய கடனை (ரூ.6.3 லட்சம்) முழுமை யாக அடைக்க இந்தத் தொகை போதாது” என்றார்.

இதுகுறித்து ராஜாவின் மனைவி சித்ரா கூறும்போது, “வங்கிகளைப் போல் அல்லாமல், சிறு வணிக கடன் நிறுவனங்களிடம் சுலபமாக கடன் பெற முடிகிறது. ஈட்டுப் பிணை எதையும் இவர்கள் கேட்பதில்லை. மேலும் சிறுகடன் நிறுவன ஊழியர்கள் வீடு தேடி வந்து கடன் கொடுக்கின்றனர்.

ஒரு கடனை அடைக்க இன் னொரு கடன் பெற வேண்டி உள்ளது. இப்படித்தான் 5 முறை நாங்கள் கடன் வாங்கினோம். அதேநேரம் கடனை வசூலிக்க வீட்டுக்கே வந்து மிரட்டுகின்றனர். கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத காரணத்தால், காலை 9 மணிக்கு முன்பே 4 குழந்தைக ளுடன் பஸ்ஸில் பயணம் செய்து பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுகிறேன். ஒரு மணி நேர பயண தொலைவில் உள்ளது எனது பெற்றோர் வீடு. மாலையில் தான் வீடு திரும்புகிறோம்.

“கடனை அடைக்க முடிய வில்லை என்றால் எதற்கு உயிரு டன் இருக்கிறீர்கள். சாக வேண்டி யதுதானே” என என்னிடம் கோப மாக கூறுகிறார் சிறு வணிக கடன் நிறுவன ஊழியர். இதனால் வெறுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்” என்றார்.

இந்நிலையில் சித்ரா சமீபத்தில் ஒரு ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந் துள்ளார். மாவட்டத்திலேயே இந்த ஒரு தொழிற்சாலை மட்டும்தான் உள்ளது. இதில் மாதம் ரூ.5,600 சம்பளம் பெறுகிறார். கட்டிட மேஸ் திரியான இவரது கணவருக்கு தின மும் வேலை கிடைப்பது அரிது.

தற்கொலை அதிகரிப்பு

மட்டக்களப்பில் மட்டும் 27 சிறுகடன் நிறுவனங்களின் கிளை கள் செயல்படுவதாக மாவட்ட நிர் வாகத்தினர் கூறுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித் துள்ளதாக மாவட்ட அதிகாரி பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்துள் ளார். இதுகுறித்து கடந்த 2012-ல் இலங்கை மத்திய அரசின் கவனத் துக்கு எடுத்துச் சென்ற இவர், கடன் வட்டியைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இதுகுறித்து சார்லஸ் கூறும் போது, “என்னால் முடிந்தவரை சிறுகடன் நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கான வட்டியை 14 சதவீத மாகக் குறைக்க நடவடிக்கை எடுத் துள்ளேன். அரசியல் அழுத்தம் காரணமாக அதற்கு மேல் குறைக்க முடியவில்லை.

போருக்குப் பிறகு இங்கு வேலை வாய்ப்பு உருவாகவில்லை. முதலீடு வரவில்லை. இதனால் சிறுகடன் நிறுவனங்கள் நுழை வது பெருகிவிட்டது. அன்றாட பிழைப்புக்காக இந்த நிறுவனங் களிடம் கடன் வாங்குபவோர் அதிக மாகிவிட்டனர். அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாதபோது தொழில் முனைவோராவது பற்றி அவர்களால் எப்படி சிந்திக்க முடியும்” என்றார்.

சிறுகடன் நிறுவனங்கள் மாதா மாதம் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் பெண்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. சமீபகாலமாக வாராவாரம் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பையும் வழங்குகின்றன. இந்தக் கடனுக்கு 28 சதவீதம் வட்டி வசூலிப்பதாகக் கூறுகின்றன. ஆனால், வாரந்தோறும் அசலின் ஒரு பகுதியையும் வட்டியையும் திருப்பிச் செலுத்துவதால் மொத்தம் 69 சதவீத வட்டியை வசூலிக்கின்றன.

இதுகுறித்து ஹேமா என்பவர் கூறும்போது, “கடன் வாங்கும் போது பெண்ணின் கணவர் உத்தர வாதம் அளித்து கையெழுத்து போட்டாலும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் பெண் களே குற்றம்சாட்டப்படுகின்றனர். வாராந்திர கடன் முறையை ரத்து செய்ய வேண்டும்” என்றார். இந்தப் பெண் தனது வீடு, நிலத்தை விற்று கடனைத் திருப்பிச் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறுகடன் நிறுவனங் கள் சங்கத்தின் கவுரவ செயலாளர் இம்ரான் நபீர் கூறும்போது, “உள் நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுகடன் நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் அமைந்தது. அதேநேரம் இந்த நிறுவனங்கள் வழங்கிய கடன் தமிழர்களின் நிதி பிரச்சினைக்கு உடனடி தீர்வாக அமைந்தது. இந்த நிறுவனங்களால் சாதகமும் உள்ளது பாதகமும் உள்ளது” என்றார்.

கடன் வசூலிப்பில் அதற்கான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சிறுகடன் சங்கம் வலியுறுத்தி வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங் களில் உள்ள குடும்பங்களின் கடன் சுமை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கடந்த மே மாதம் இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது. இருப்பினும், சித்ரா போன்றவர்களின் குடும்பங்கள் கடன் என்ற புதைகுழியில் சிக்கி மீளமுடியாமல் தவிப்பது பதைபதைக்க வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x