Last Updated : 07 Nov, 2014 09:33 AM

 

Published : 07 Nov 2014 09:33 AM
Last Updated : 07 Nov 2014 09:33 AM

ரூ.1000 கோடிக்கு இரண்டு சிற்பங்கள்: அமெரிக்க ஏலத்தில் விற்பனை

நவீன சிற்பக் கலையின் தலை சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகிற 2 சிற்பங்கள், அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 172 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.1,032 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நியூயார்க் நகரத்தில் இந்த மாதம் 12ம் தேதி வரை ‘சூத்பேஸ்' எனும் ஏல நிறுவனம் பழமையான கலைப் பொருட்களை ஏலம் விடுகிறது. அதன் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது சுவிட்சர்லாந்து நாட்டு சிற்பக் கலைஞரான அல் பர்டோ கியாகோமெட்டி 1950ம் ஆண்டு படைத்த ‘சாரியட்' எனும் பெயர் சூட்டப்பட்ட சிற்பம் 101 மில்லியன் அமெரிக்க டாலர் களுக்கு (சுமார் ரூ.606 கோடி) ஏலத் தில் எடுக்கப்பட்டது.

உலகப் போர்களுக்குப் பிறகான தலைமுறைகளுக்கு நம்பிக்கை அளிக்கும் சின் னமாக இந்தச் சிற்பம் நினைவு கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை ஏலத்தில் எடுத்தவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x