Published : 30 Jan 2014 11:38 AM
Last Updated : 30 Jan 2014 11:38 AM

சிரியா பேச்சில் முன்னேற்றம் இல்லை: ஐ.நா.நடுவர் தகவல்

சிரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு குறுக்காக நிற்கும் தடைகளை களைவதற்கான ஐநா அமைப்பின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

அதிகார மாற்றம் தொடர்பாக பேசுவதற்கு பதிலாக, பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அரசு தரப்பினர் அமெரிக்காவைக் குறை கூறி பேசியதால் பேச்சுவார்த்தை தடைபட்டது.

இந்நிலையில் சிரியாவின் முக்கிய நகரமான ஹோம்ஸில் நடமாடமுடியாமல் முற்று கைக்குள்ளாகி உள்ள பொது மக்களுக்கு நிவாரணப் பொருள் களை வழங்கும் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை, தேக்கநிலை ஏற்பட்டதால் பிற்பகல் பேச்சு ரத்து செய்யப்பட்டது. மறுதினம் பேச்சுவார்த்தையை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டதாக ஐ.நா. நியமித்த நடுவர் லக்தர் பிரஹிமி தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையிலிருந்து யாரும் வெளியேறவும் இல்லை, விலகிச்செல்லவும் இல்லை. பேச்சுவார்த்தையில் முன்னேற் றம் ஏற்படவில்லை என்றாலும் இதுவரையிலும் நடந்த ஆலோ சனை திருப்திதான் என்றார் பிரஹிமி. செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது சிரியா அதிபர் பஷார் அல் அசாத் அரசின் பிரதிநிதிகள் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை வாஷிங்டனை கண்டிப்பதாக இருந்தது.

சிரியாவிலுள்ள பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த முடிவானது பேச்சுவார்த்தை மூலம் சிரியாவில் அரசியல் தீர்வு காணும் முயற்சிக்குத் தடை போடுவதாகவே அர்த்தம் என்று சிரியா அரசு தரப்பினர் தாக்கல் செய்த அறிக்கையில் உள்ளது.

சிரிய அமைதிப் பேச்சு வார்த்தை வெற்றிபெற்று விடக்கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப் பதைத்தான் அதன் நடவடிக்கை காட்டுகிறது என்றார் சிரியா துணை வெளியுறவு அமைச்சர் ஹைசல் முக்தாத். இதனிடையே, பயங்கரவாதிகளை வாஷிங்டன் ஆதரிப் பதாக குற்றம்சாட்டப்படுவதை நிராகரித்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் எட்கர் வாஸ்கஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x