Last Updated : 21 Jun, 2017 12:32 PM

 

Published : 21 Jun 2017 12:32 PM
Last Updated : 21 Jun 2017 12:32 PM

பிலிப்பைன்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்

பிலிப்பைன்ஸில் தென் பகுதியிலுள்ள கிராமத்தை பணயமாக வைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மலாகட் பகுதியிலுள்ள ராணுவ பள்ளியில் உள்ள மாணவர்களையும் தீவிரவாதிகளையும் பிடித்து வைத்துள்ளதாக தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் ராணுவம் வலுவான பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காவல்துறை ரிலன் மாமோன் கூறும்போது, "பிலிப்பைன்ஸில் தென்பகுதியிலுள்ள மலகாகிட் பகுதியில் நுழைந்த துப்பாக்கி ஏந்திய ஐஎஸ் தீவிரவாதிகள் அங்குள்ள கிரமத்தினர் சிலரை தாக்கினர். தீவிரவாதிகளுடன் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சண்டையிட்டு வருகின்றனர். கிரமத்தினர் அனைவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.

ஐஎஸ் தீவிரவாதிகள் அங்குள்ள ராணுவப் பள்ளியிலுள்ள மாணவர்களை சிறைப்பிடித்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தீவிரவாதிகளை நோக்கி முன்னோக்கி நகர்ந்து வருகிறோம்" என்றார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 800 கி.மீ தொலைவில் உள்ள மாராவியில் கடந்த மே மாதம் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் 100 பேர் ஊடுருவினர்.

இவர்கள் அங்குள்ள வீடுகள், மருத்துவமனைகள், தேவாலயங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்றுவதற்காக அப்பகுதியில் அதிபர் ரோட்ரிகோ ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x