Published : 06 Jan 2014 10:52 AM
Last Updated : 06 Jan 2014 10:52 AM
சிறிய ரக பயணிகள் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக, பரபரப்பான நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது. இதில், 3 பேர் காயமடைந்தனர்.
ஒற்றை இன்ஜின் கொண்ட விமானம், சுதந்திர தேவி சிலை பகுதியில் இருந்து கனெக்டிகட் டான்பரி பகுதிக்குச் சென்று சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, இயந்திரக் கோளாறு காரணமாக மேஜர் டீகன் எக்ஸ்பிரஸ் வே பாதையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும், விமானத்தை லா கார்டியா விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்தார். ஆனால், அங்கு செல்வதற்கு முன் நிலைமை மோசமடைந்ததால், நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது.
விமானியும், இரு பெண் பயணிகளும் சிறிய அளவில் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மேஜர் டீகன் எக்ஸ்பிரஸ் வே போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். விமானம் தரையிறங்கிய சமயத்தில், அங்கு பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இரு வழிகள் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும், விமானம் தாழ்வாகப் பறக்கத் தொடங்கியதும், சாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், சாலைப் போக்குவரத்தைத் தடை செய்தனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT