Last Updated : 22 Sep, 2016 06:39 PM

 

Published : 22 Sep 2016 06:39 PM
Last Updated : 22 Sep 2016 06:39 PM

ஏமன் துறைமுக நகர் மீதான தாக்குதலில் 20 பேர் பலி

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் துறைமுக நகரான ஹொடேடா மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படை நடத்திய வான்வழி தாக்குதலில் அப்பாவி மக்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் சனாவை கைப்பற்றியதன் 2-ம் ஆண்டு தினத்தை கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் கொண்டாடிய சில மணி நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹாதி அரசின் அதிகாரி ஒருவர் கூறினார்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட் டுள்ள ஏமனில், அதிபர் அபெட்ரபோ மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அதிக எண்ணிக்கையில் அப்பாவி மக்கள் பலியா வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டுப் படை தலையிட்ட பிறகு 6,600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறுகிறது.

இந்தப் படையின் தலையீட்டால் தெற்கு ஏமனின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் விரட்டப்பட்டுள்ளனர். என்றாலும் செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளும் தலைநகர் சனாவும் இன்னும் அவர்கள் கட்டுப்பாட்டில் நீடிக்கின்றன.

இந்நிலையில் ஹொடேடா நகரின் சுக் அல்-ஹுனோத் பகுதி மீது நேற்று முன்தினம் இரவு விமானத் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறும்போது, “தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதிகள் தாக்கப்பட்டிருக்கலாம். தாக்குதலில் அங்குள்ள அதிபர் மாளிகையும் சேதம் அடைந்துள்ளது” என்றார்.

தாக்குலுக்கு உள்ளான பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களைப் பொதுமக்கள் தேடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.மேலும் நகர பிணவறை ஒன்றில் குழந்தை களின் உடல்களும் வைக்கப் பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி யுள்ளன.

சுக் அல்-ஹுனோத் பகுதியில் உள்ள அல்-தவ்ரா மருத்துவமனைக்கு மட்டும் 12 பேரின் உடல்களும் காயமடைந்த 30 பேரும் கொண்டுவரப்பட்டதாக மருத்துவர் ஒருவர் கூறினார்.

கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள சனா நகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும் இது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x