Published : 19 Jun 2017 03:40 PM
Last Updated : 19 Jun 2017 03:40 PM
ஜப்பான் கடலில் விபத்துக்குள்ளான அமெரிக்க போர் கப்பலிலிருந்து காணாமல்போன கடற்படை வீரர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கடற்படை அதிகாரி ஜோசப் பி. அக்கோய்ன் கூறும்போது, "அமெரிக்க போர் கப்பல் ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானபோது காணாமல் போன ஏழு பேரும் உறக்கத்தில் இருந்துள்ளதால் உயிரிழந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்றார்.
ஜப்பான் கடல் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல் அவ்வழியாக சென்ற சரக்கு கப்பல் மீது மோதியது. இதில் அமெரிக்க போர்க்கப்பல் கடுமையாகச் சேதமடைந்தது.
இந்த விபத்தைத் தொடர்ந்து போர்க்கப்பலின் மேல்தளத்தில் இருந்த 7 வீரர்களைக் காணவில்லை என்றும் போர்க்கப்பலின் கேப்டன் கமாண்டர் பிரைஸ் பென்சன் உட்பட 3 பேர் காயமடைந்தனர் என்றும் அமெரிக்க கப்பற்படை அறிவித்தது.
இந்த நிலையில் காணாமல் போன கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் 7 பேரும் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT