Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM
அமெரிக்காவுக்கான இந்திய தூதரக மூத்த அதிகாரியான தேவயானியை ஐநா பணிக்கு மாற்றக்கோரும் மனு மீது அமெரிக்கா இன்னும் பரிசீலனை செய்து வருகிறது.
அவருக்கு தூதரகம் சார்ந்த பணியினால் கிடைக்கும் சில சட்டரீதியான பாதுகாப்புகளை அனுமதிப்பதற்கான ஆவணங்களை வழங்குவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை வெளியுறவு செய்தித்தொடர்பாளர் செவ்வாய்க் கிழமை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எப்போது முடிவு எடுக்கப்படும் என்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.
தேவயானிக்கு தூதர் நிலை அந்தஸ்து கேட்டு அமெரிக்காவுக்கு ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. அந்த மனு மீதான நிலவரம் பற்றி கேட்டபோது மேற் கொண்ட கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேவயானியின் மனு, நியூயார்க்கில் உள்ள ஐநா அலுவலகத்திலிருந்து டிசம்பர் 20ம் தேதி வெளியுறவு அமைச்ச கத்துக்கு கிடைத்தது. வழக்கமாக இத்தகைய விவகாரங்களில் அமெரிக்கா மிக விரைவாக முடிவு எடுத்துவிடும். ஆனால் இதில் வழக்கத்துக்கு மாறாக காலதாமதம் ஆகிறது முந்தைய மனுக்களுடன் இதை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு வேண்டுகோளும் அதனதன் தன்மைக்கு ஏற்ப தனித்தனியாக ஆய்வு செய்யப்படுகிறது,.
விசா மோசடி செய்ததாகவும் தவறான தகவல் கொடுத்ததாகவும் தேவயானி டிசம்பர் 12ம் தேதி கைது செய்யப்பட்டார். தேவயானி நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக இருந்தார். அந்த அந்தஸ்தில் அவருக்கு தூதரக பதவி சார்ந்த பாதுகாப்புகள் கிடையாது என்று அமெரிக்கா கைவிரித்துவிட்டது.
கைது செய்யப்பட்ட சில தினங் களில் தேவயானியை ஐநாவில் உள்ள இந்தியாவுக்கான நிரந்தர தூதரக பணிக்கு இந்தியா மாற்றி யது. இதன்மூலம் தேவயானிக்கு கைதிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு. தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்காவை கடு மையாக கண்டித்ததுடன், இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கி வந்த சிறப்பு சலுகைகளில் சிலவற்றை வாபஸ் பெற்றது இந்தியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT