Published : 20 Jan 2016 09:39 AM
Last Updated : 20 Jan 2016 09:39 AM
சர்வதேச விண்வெளி நிலையத் தில் ஜின்னியா பூவை மலர வைத்து, நாசா விஞ்ஞானிகள் சாதனைபுரிந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளின் கூட்டுப்பங்களிப்பில் விண்வெளி யில், சர்வதேச விண்வெளி நிலை யம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். தற்போது, விண்வெளியில், முதல் பூ மலர்ந்துள்ளது. ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலராகும்.
இந்த மலரை அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி புகைப்படம் எடுத்து அதனை, ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங் களும் மலர்களும் எப்படி வளர்கின் றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச் செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர்.
இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட் டுள்ளது. செவ்வாய் கிரகத்திலும் மனித இனம் வாழும் திறன் பெறும் என்பதையும் இது உணர்த்துகிறது. கெல்லி, ஸ்பேஸ்பிளவர் என்ற ஹேஷ்டேக்கில் தனது ட்விட்டரில் விண்வெளியில் மலரவைக்கப்பட்ட பூவை பதிவு செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT