Published : 08 Sep 2016 06:16 PM
Last Updated : 08 Sep 2016 06:16 PM
தன்னைக் கடுமையாக வசைபாடிய நிலையிலும் பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்து பேசினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
பிலிப்பைன்ஸில் புதன் கிழமை ஒட்டல் ஒன்றில் நடந்த இரவு விருந்தின்போது இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவரது சந்திப்பும் மிக குறுகிய நேரமே நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக பிலிப்பைன்ஸின் வெளியுரவு செயலாளர் பெஃபெக்டோ யாசா கூறும்போது,"ஒபாமா மற்றும் ரோட்ரிக்கோவின் இந்த சந்திப்பு எவ்வளவு நேரம் நடந்தது என்று கூறமுடியாது.
இருவரது சந்திப்பின் முக்கிய அம்சமாக பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவின் உறவு குறித்து பேசப்பட்டது. இந்த சந்திப்பு நிகழ்ந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
என்னை கேள்வி கேட்க ஒபாமா யார்?
முன்னதாக கடந்த திங்கள்கிழமை லாவோசில் நடைபெறும் மண்டல உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை ரோட்ரிகோ சந்திப்பதாக இருந்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் பிலிப்பைன்ஸ் அதிபரிடம் கேட்ட போது, “போதை மருந்து வலைப்பின்னலை ஒழிப்பதில் நடைபெறும் சட்ட விரோதக் கொலைகளை எப்படி ஒபாமாவிடம் விவாதிப்பீர்கள், எப்படி விளக்குவீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ரோட்ரிகோ, “இறையாண்மை பொருந்திய நாட்டின் அதிபர் நான். நாம் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது. பிலிப்பைன்ஸ் மக்களைத் தவிர எனக்கு வேறு ஒருவரும் ஆணையிட முடியாது. நீங்கள் மரியாதையைக் கடைபிடிக்க வேண்டும். எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என நினைக்காதீர்கள்” என்று சாடிய அதிபர் ரோட்ரிகோ
பிறகு, "என்னை கேள்வி கேட்க இந்த ஒபாமா யார்? பிலிப்பைன்சை காலனியாதிக்கம் செய்து சுரண்டியதற்கு அமெரிக்கா இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை?" என்று கடுமையாக சாடினார்.
இதனையடுத்து தனது கருத்திலிருந்து பின் வாங்கிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் ஒபாமா குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரு அதிபர்களிடையே இந்த சந்திப்பு நடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT