Published : 01 Sep 2016 03:48 PM
Last Updated : 01 Sep 2016 03:48 PM
வடகொரியாவில் அரசு உயர்மட்ட கூட்டம் ஒன்றில் அதிபர் கிம் ஜோங்கை அவமரியாதை செய்யும் வகையில் தூங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தென் கொரிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வட கொரிய அதிபர் கிம் ஜோங் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறார். உடல் நலக்கோளாறு காரணமாக மயங்கிய அதிகாரி கிம் யோங் ஜின்னை தூங்கிவிட்டார் என குற்றம் சுமத்தி அதிபர் கிம் ஜோங் மரண தண்டனைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியையே கிம் ஜோங் நடத்தி வருகிறார்" என்றார்.
இந்த நிலையில் தென் கொரியாவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கை ஜூன்காங் இல்போ ( JoongAng Ilbo ) வட கொரிய அதிபர் கிம் ஜோங்கினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர் கல்வித்துறை அதிகாரி என செய்தி வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT