Published : 14 Oct 2013 08:37 PM
Last Updated : 14 Oct 2013 08:37 PM
முஸ்லிம் அல்லாதவர்கள் 'அல்லா' என்ற வார்த்தையைக் கடவுளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தக் கூடாது என மலேசிய உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் வெளிவரும் 'தி ஹெரால்டு' கிறிஸ்துவப் பத்திரிகை 'அல்லா' என்ற வார்த்தையை கடவுளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்துவதை இதன் மூலம் தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'தி ஹெரால்டு' பத்திரிகை கத்தோலிக்க கிறிஸ்துவ ஆதரவுப் பத்திரிகையாகும். இப்பத்திரிகை 'அல்லா' என்ற வார்த்தையைக் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தி வந்தது. இதற்கு மலேசிய உள்துறை அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டது.
'அல்லா' என்ற வார்த்தையை கிறிஸ்துவப் பத்திரிகையான 'தி ஹெரால்டு' கடவுளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு, சட்டத்துக்கு விரோதமானது, செல்லத்தக்கது அல்ல என 2009 ஆம் ஆண்டு மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு மலேசியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டன. தீ வைப்புச் சம்பவங்கும் அரங்கேறின.
இதனிடையே, மத்திய நீதிமன்ற நீதிபதிகள் செரி முகமது அபாண்டி அலி, ஆஸிஸ் அப்துல்லா ரஹிம், முகமது ஸவாவி சலே ஆகியோரடங்கிய அமர்வு, முஸ்லிம் அல்லாதவர்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்துவ மத நம்பிக்கைகளிலும், வழிபாட்டு முறைகளிலும் 'அல்லா' என்ற வார்த்தை ஒரு பகுதி அல்ல என்பதால் அந்தப் பத்திரிகை 'அல்லா' என்ற வார்த்தையை கடவுளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
ஹெரால்டு பத்திரிகையின் ஆசிரியர், இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT