Published : 24 Jan 2014 04:28 PM
Last Updated : 24 Jan 2014 04:28 PM

சிஎன்என் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் அத்துமீறல்

அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என்-னின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளப் பங்ககளில் சிரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் அத்துமீறி நுழைந்து பதிவுகள் இட்டனர்.

சிஎன்என் நிறுவனத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களில் அத்துமீறி நுழைந்த 'சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி' பெயரிலான ஹேக்கர்கள், சில தவறான தகவல்களைப் பதிவு செய்தனர்.

"பொய் சொல்வதை நிறுத்துங்கள். உங்களின் செய்திகள் அனைத்தும் பொய்யானவை" என்று அவர்கள் பதிவிட்டனர்.

பின்னர், அப்பதிவுகள் உடனடியாக நீக்கிய சிஎன்என் நிறுவனம், தற்போது தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியிட்டது.

சிரியாவுக்கு எதிரான செய்திகளைத் தொடர்ந்து சிஎன்என் நிறுவனம் வெளியிட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, சிரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் இந்த இணையதள அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x