Published : 23 Sep 2016 02:36 PM
Last Updated : 23 Sep 2016 02:36 PM
கிழக்கு ஜப்பானின் கடற்கரை பகுதியில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், “காலை 9.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் ஆக பதிவாகியது. கத்சுரா நகருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 150 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஜப்பான் புவியியல் ஆய்வும் மையம், “இந்த நிலநடுக் கம் 6.5 ரிக்டர் செரிவு கொண்டதாக இருந்தது” என்று கூறியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்பு, காயம் அடைதல் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.
பூமிக்கு அடியில் 4 நிலத்தட்டுகள் சேரும் இடத்தின் மீது ஜப்பான் அமைந்துள்ளது. இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. என்றாலும் அங்கு கட்டிட விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படுவதால், மற்ற நாடுகளை காட்டிலும் உயிரிழப்பு குறைவாக உள்ளது.
ஜப்பானில் கடந்த 2011, மார்ச் மாதம் ஏற்பட்ட கடும் நிலநடுக் கத்தைத் தொடர்ந்து வடகிழக்கு கடற்பகுதியில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையமும் பாதிக்கப் பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு ஜப்பானின் குமமோட்டோ பகுதியில் 2 கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதையடுத்து 1.700 முறைக்கும் மேல் பின்னதிர்வு கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்களில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். பெருமளவில் சேதம் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT