Published : 26 Jan 2014 11:11 AM
Last Updated : 26 Jan 2014 11:11 AM
உக்ரைனில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதைத் தடுக்க ரஷ்ய, அமெரிக்க தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகைல் கோர்பசேவ் கூறினார்.
உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க தலைநகர் கீவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் உக்ரைனில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோருக்கு முன் னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகைல் கோர்பசேவ் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப் பதாவது: “உக்ரைனில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள், அந்நாட்டை மட்டுமின்றி ஐரோப்பாவையும் பாதிக்கும். எனவே, அங்கு உள்நாட்டுப் போர் ஏற்படாமல் தடுக்க வேண்டும். உக்ரைனைச் சேர்ந்தவர்களுக்குள் மோதல் ஏற்படு வதை அனுமதிக்கக் கூடாது. இரு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மிகவும் மோசமான நிலை ஏற்பட்டு விடும்” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் கடந்த சில நாட்களாக போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்து வரும் மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து, நிலைமை சிறிது முன்னேற்ற மடைந்துள்ளது. கடந்த வெள்ளிக் கிழமையிலிருந்து அமைதி நிலவுகிறது.
எனினும், எப்போது வேண்டு மானாலும் போராட்டம் மீண்டும் வெடிக்கலாம் என்ற நிலைமையே நீடித்து வருகிறது. மோதலில் ஈடுபடாவிட்டாலும், முக்கிய சாலைகளில் போராட்டக்காரர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். சிறிது தொலைவில் போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்காக நின்று கொண்டிருக்கின்றனர்.
தலைநகர் கீவில் அமைதி திரும்பிய நிலையில், நாட்டின் பிற பகுதிகளுக்கு கிளர்ச்சி பரவத் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT