Last Updated : 26 Jul, 2016 09:08 AM

 

Published : 26 Jul 2016 09:08 AM
Last Updated : 26 Jul 2016 09:08 AM

சீனா உருவாக்கிய உலகின் மிகப் பெரிய கடல் விமானம்

கடல் பரப்பில் இருந்தும் வானில் எழுந்து பறக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய விமானத்தை சீனா உருவாக்கியுள்ளது.

இந்த விமானம் சீனாவின் தெற்கு துறைமுக நகரான ஜுகை நகரில் கடந்த சனிக்கிழமை பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவிக்கிறது.

ஏஜி 600 என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தை சீன அரசுக்கு சொந்தமான ஏவிஐசி (சீன விமானத் தொழில் நிறுவனம்) உரு வாக்கியுள்ளது. இந்த விமானம் முழு எரிபொருள் கொள்ளளவுடன் 4,500 கி.மீ. பறக்கும் திறன் கொண்டது. கடற்பகுதியில் விபத்து நேரிடும்போது மீட்புப் பணிக ளுக்கும் நிலப்பகுதியில் காட்டுத் தீயை அணைக்கவும் இந்த விமானத்தை பயன்படுத்தலாம்.

இது மட்டுமின்றி, கடல்வள மேம்பாடு மற்றும் பயன்பாடு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, புதிய வளங்கள் கண்டுபிடிப்பு, போக்கு வரத்து என பல்வேறு தேவைக ளுக்கும் இந்த விமானத்தை பயன்படுத்தலாம்.

தென் சீனக் கடல் பகுதியில் சில தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருவதால் அந்நாட் டுக்கும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக் கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் இந்த விமானம் உதவியாக இருக் கும் என கருதப்படுகிறது.

ஏவிஐசி நிறுவனத்துக்கு இதுபோல் 17 விமானங்களுக்கான ஆர்டர் இதுவரை வந்துள்ளது.

விமானத் தேவைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில், உள் நாட்டு தொழில்நுட்பத்தை சீனா மேம்படுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x