Published : 15 Jun 2017 05:37 PM
Last Updated : 15 Jun 2017 05:37 PM
சோமாலியா தலைநகர் மோகதிசுவில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சோமலியா போலீஸார் தரப்பில், "சோமாலியாவின் தலைநகர் மோகதிசுவிலுள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் அல்- ஷபாப் தீவிரவாதிகள் இன்று (வியாழக்கிழமை) கார் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதி 19 பேர் பலியாகினர். மேலும் ஓட்டலிலிருந்த சிலரை பணயக் கைதிகளாகவும் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர். பாதுகாப்புப் படையினரின் தொடர் முயற்சியால் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது ஓட்டல் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT