Published : 23 Jul 2016 04:55 PM
Last Updated : 23 Jul 2016 04:55 PM
ரஷ்யாவைச் சேர்ந்த பெடோர் கோன்யுகோவ் சாகச வீரர் ராட்சத பலூன் மூலம் உலகை அதிவிரைவில் சுற்றி வந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் பெடோர் கோன்யுவோவ் (64), பல்வேறு வித்தியாசமான சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். பெடோர் கோன்யுவோவ்னின் சாகசப் பட்டியலில் மற்றுமொரு சாகசமும் இணைந்துள்ளது.
ஜூலை 12ஆம் தேதி மேற்கு ஆஸ்திரேலியாலிருந்து ராட்சத பலூனில் புறப்பட்ட பெடோர் கோன்யுவோவ் 11 நாட்களில் 35,000 கிலோ மீட்டர் பயணித்து இன்று நண்பகல் ஆஸ்திரேலிய எல்லைப் பகுதியில் தரையிறங்கினார்.
ராட்சத பலூனில் உலகை சுற்றி வந்த பெடோர் கோன்யுவோவ்
இதன் மூலம் 14 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கரான ஸ்டீவ் ஃபோசட்டின் சாதனையை முறியடைத்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் பெடோர் கோன்யுவேன்.
பெடோர் கோன்யுவேனின் இச்சாதனையை அவரது மனைவி மற்றும் மகன் ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பெடோரின் மகன் ஆஸ்கார் தனது தந்தையின் சாதனை குறித்து கூறும்போது, “என் தந்தையின் சாதனையை நினைக்கும் போது மிக பெருமையாக இருக்கிறது. என் தந்தை செய்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாததாக இருக்க போகிறது” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT