Published : 13 Nov 2014 07:44 PM
Last Updated : 13 Nov 2014 07:44 PM
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மைய வளாகத்துக்கு அருகே 4 இடங்களில் ஐ.எஸ். அமைப்பின் கொடி ஏற்றப்பட்டதால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு பாதுக்காப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் நகரின் டெக்ஸிலா பகுதியில் உள்ள ராணுவ தளவாட தயாரிப்பு மையம் அருகே சிரியா, இராக்கில் ஆக்கிரமித்து வரும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் கொடிகள் அங்கிருந்த 4 மின்சார கம்பங்களில் ஏற்றப்பட்டிருந்தது. இதனால் ஏற்கனவே பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்களோடு இணைந்து ஐ.எஸ். அமைப்பினரின் சதி செயல்களும் நடக்கலாம் என்ற அச்சம் அங்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் 'டான்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்துக்கு சமீபத்தில் ஐ.எஸ். அமைப்பின் செயதித் தொடர்பாளர் என்று சந்தேகிக்கப்படுபவர் ஏற்கனவே அங்கு இயங்கி கொண்டிருக்கும் ஜுன்துல்லா தீவிரவாத இயக்கத்தினரை சந்தித்து சென்றதாக வெளியான தகவலைத் தொடந்து இந்த செய்தியும் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் உள்நாட்டு தீவிரவாத அமைப்பான ஜுன்துல்லா, சமீபத்தில் நடந்த வாகா எல்லைத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT