Published : 12 Apr 2017 03:49 PM
Last Updated : 12 Apr 2017 03:49 PM
அமெரிக்காவின் எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியாவின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கூறியதாக ரோடாங் சின்மன் செய்தித்தாள் வெளியிட்ட செய்தியில், "வடகொரியாவின் வலுவான ராணுவப் படையின் மூலம் அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து வருகிறோம். கொரிய தீபகற்பத்தில் மேற்கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகைப்படுத்தப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ள வடகொரியா தயாராக இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை அமெரிக்காவும் தொடர்ந்து எச்சரித்து வந்தது.
சமீபத்தில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையேயான சந்திப்பில் கூட வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT