Published : 20 Jan 2016 03:10 PM
Last Updated : 20 Jan 2016 03:10 PM
இராக்கில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 3,500 பேரை ஐஎஸ் இயக்கத்தினர் அடிமைகளாகக் கொண்டு கொடூர செயல்களில் ஈடுபடுவதாக ஐநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் அங்கு இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் என்று குறிப்பிடும் வகையிலான கொடூர செயல்களில் ஈடுபடுவதாக ஐநா-வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
ஐநா மனித உரிமைகள் ஆணையமும் மற்றும் இராக்குக்கான ஐநா உதவி மையமும் இணைந்து இது தொடர்பான கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இராக்கில் பல இடங்களை ஆக்கிரமித்துள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினர் யாஷிதி பழங்குடியின மக்களை குறிவைத்து அவர்களது கலாசாரத்துக்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த சிறுபான்மையின மக்களுள் பெண்களையும் குழந்தைகளையும் குறி வைத்து கொடூரமாக வதைக்கின்றனர்.
மக்களை உயரிய கட்டிடங்களிலிருந்து கீழே தள்ளி விடுவது, துப்பாக்கிச்சூடு, தலையைக் கொய்வது, உயிரோடு எரிப்பது போன்ற கொடூர செயல்களைச் செய்து வருகின்றனர்.
2 வருடத்தில் 19 ஆயிரம் மக்கள் படுகொலை
கடந்த 2014 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையான காலத்தில் குறைந்தது 18,800 பேர் கொல்லப்பட்டனர். இதே காலகட்டத்தில் சுமார் 30 லட்சம் மக்கள் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 7000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறுவர் போராளிகள்
சுமார் 900 சிறுவர்களை ஐஎஸ் இயக்கம் அவர்களது போராளிகளாக மாற்றியுள்ளது மொசூல் நகரில் ராணுவ பயிற்சிக்காகவும் இயக்கத்தின் கோட்பாடுகளை அவர்களுக்கு புகுத்துவதற்காகவும் அவர்கள் கடத்தப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT