Published : 02 Jan 2016 04:06 PM
Last Updated : 02 Jan 2016 04:06 PM
அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் டிரம்ப்பின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்சு வீடியோவை சோமாலிய தீவிரவாத இயக்கம் தங்களது ஆள்சேர்ப்பு விளம்பரத்தில் உபோயாகப்படுத்தியது தெரியவந்துள்ளது.
பிரபல அமெரிக்க தொழிலதிபரும் வரவிருக்கும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான டோனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சார களத்தில் தீவிரவாதம் குறித்து பேசிய கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் டிரம்ப் இஸ்லாமியர்கள் குறித்து பேசிய வீடியோவை வைத்து தங்களது இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் விளம்பரப் படத்துகாக சோமாலியாவின் அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் பயன்படுத்தியுள்ளதாக சைட் என்ற தீவிரவாத கண்காணிப்பு மற்றும் புலனாய்வில் ஈடுபடும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் குறித்து டிரம்ப்பின் பேச்சை கேட்கும் அமெரிக்கர்கள் கோஷமெழுப்பி வரவேற்றதை இஸ்லாம் சமூகத்துக்கு எதிரான நோக்கமாக குறிப்பிட்டு 50 நிமிடங்கள் கொண்ட விளம்பர ஆவணத்தை அந்த இயக்கம் தயாரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT