Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM

லாக்கர்பை 25-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கடந்த 1988 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் பான் ஏம் 103 விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இறந்தவர்களுக்கு 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து லண்டன், நியூயார்க் நகரம் வழியாக அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்கு பான் ஏம் 103 என்ற விமானம் பயணித்தது.

இவ்விமானம் லண்டனில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஸ்காட்லாந்தின் லாக்கர்பை நகரம் மீது பறந்து கொண்டிருக்கும் போது, பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததால் சிதறியது.

இச்சம்பவத்தில் வெளிநாட்டில் பயில்வதற்காகச் சென்ற சிரக்யூஸ் பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் உள்பட 259 பயணிகள், விமானம் கீழே விழுந்ததில் தரையில் வசித்த 11 பேர் என மொத்தம் 270 பேர் பலியாகினர். இச்சம்பவத்தின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம் அமெரிக்காவின் எர்லிங்டன் நகரிலும் ஸ்காட்லாந்திலும் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். சிரக்யூஸ் பல்கலைக் கழக வளாகத்திலும் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x