Last Updated : 24 Jan, 2017 04:28 PM

 

Published : 24 Jan 2017 04:28 PM
Last Updated : 24 Jan 2017 04:28 PM

ஆபாச, வன்முறை பதிவுகளைக் கொண்ட 5,500 சட்டவிரோத செயலிகளை நீக்கியது சீனா

ஆபாசம் மற்றும் வன்முறை உள்ளடக்கங்களைக் கொண்ட, சட்டவிரோதமான 5,500 செயலிகளை சீனாவின் இணைய மேற்பார்வையாளர்கள் நீக்கியுள்ளதாக, அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் தனியார் நெட்வொர்க் சேவைகள் மூலம் தகவல்கள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே பயனாளிகள் காண அனுமதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 1,600-க்கும் மேலான செல்பேசி வீடியோ செயலிகள் ஆபாசம் மற்றும் வன்முறை பதிவுகளைப் பரப்பி வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவையனைத்தும் நேற்று (திங்கட்கிழமை) நீக்கப்பட்டதாக சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங் நிர்வாகம் தெரிவித்தது.

இதில் சுமார் 1,200 சமூக செயலிகளில் ஆபாசப் பதிவுகள் அடங்கியிருந்ததாகவும், மற்ற செயலிகள் பயனாளிகளின் அந்தரங்க தகவல்களை ஹேக் செய்து, அவற்றைப் பகிர்ந்து வந்தாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறிய சீன நிர்வாகம், ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் ஆப் ஸ்டோரில் சட்டவிரோதமான செயலிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x