Last Updated : 16 Feb, 2017 05:05 PM

 

Published : 16 Feb 2017 05:05 PM
Last Updated : 16 Feb 2017 05:05 PM

சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிராக துருக்கி வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 24 பேர் பலி

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறி வைத்து துருக்கி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட தகவலில், "சிரியாவில் அல் பாப் பகுதியில் வியாழக்கிழமை துருக்கிப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 24 பேர் பலியாகினர். இவர்களில் 10 பேர் சிறுவர், சிறுமியர்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிரிய மனித உரிமை ஆணையத்தின் இந்தக் குற்றச்சாட்டை துருக்கி ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் இந்தச் சண்டையில் தீவிரவாதிகளே கொல்லப்பட்டுள்ளனர் என்று விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் அல் பாப் நகரம் ஐஎஸ் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். கடந்த டிசம்பர் மாதம் முதல் துருக்கி படைகள் ஐஎஸ் தீவிரவாதிகள், குர்திஷ் தீவிரவாதிகளை அழிக்க தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதுகுறித்து கடந்த வாரம் துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம், அல் பாப் பகுதியில் துருக்கி படைகளின் தொடர் தாக்குதலால் ஐஏஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுக்குள் வந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சிரிய மனித உரிமை ஆணையம் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x