Last Updated : 08 Jul, 2016 10:20 AM

 

Published : 08 Jul 2016 10:20 AM
Last Updated : 08 Jul 2016 10:20 AM

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: வடகொரிய அதிபருக்கு அமெரிக்கா தடை

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் 10 பேருக்கு எதிராக, அமெரிக்கா தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுமக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்காக இத்தடை விதிக்கப்படுவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. வடகொரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா, தனிப்பட்ட முறையில் தடையுத்தரவு பிறப்பிப்பது இதுவே முதல்முறை.

அதிபர் கிம் ஜாங் தவிர, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சோ பூ உள்ளிட்டோர் மட்டுமின்றி, வடகொரியாவில் உள்ள தடுப்புக் காவல் மையங்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

‘கிம் ஜாங் உன் தலைமையி லான ஆட்சியில், வடகொரியாவில் அரசாங்கமே தனது குடிமக்களை சட்டவிரோதமாக கொன்று குவிப்பது, துன்புறுத்துவது, கட்டாய வேலை வாங்குவது என ஏராளமான மனித உரிமை மீறல்கள் அரங்கேறுகின்றன.

இதன் காரணமாகவே தடை விதிக்கப்படுகிறது’ என, அமெரிக்காவின் தீவிரவாத மற்றும் பொருளாதார குற்றப் புலனாய்வுத் துறையின் துணை நிலை தற்காலிக செயலாளர் ஆதம் ஜே சுபின் தெரிவித்தார்.

இத்தடையின் விளைவாக, அமெரிக்க அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்கள் மற்றும் சர்வதேச திட்டங்கள், அமைப்பு கள் போன்றவற்றில் கிம் ஜாங் உன் உள்பட பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் சொத் துக்கள், பணப்பரிவர்த்தனை கள், நியமனங்கள் போன்றவை முடக்கி வைக்கப்படும்.

இவர்களுடன் அமெரிக்க நபர்கள் எவ்வித பரிவர்த்தனை கள் மேற்கொள்வதும் தடை செய்யப்படுகிறது.

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை விவகாரங் களில் ஏற்கெனவே அமெரிக்கா வின் கடுமையான பொருளா தாரத் தடைகளை வடகொரியா சந்தித்திருப்பது குறிப்பிடத் தக்கது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x