Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM
தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அமல்படுத்தியுள்ள நெருக்கடி நிலையை (எமர்ஜென்சி) எதிர்த்து எதிர்க் கட்சியினரும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஷினவத்ராவை ஆட்சியில் இருந்து இறக்கும்வரை ஓயப்போவதில்லை என்று கோஷமிட்டவாறு எதிர்ப் பாளர்கள் தலைநகர் பாங்காக் வீதிகளில் ஊர்வலம் மேற்கொண்டுள்ளனர். தாய்லாந்தில் பிரதமர் ஷினவத்ராவை எதிர்த்து கடந்த இரு மாதங்களாகவே போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் அடுத்த இரு மாதங்களுக்கு நாட்டில் எமர்ஜென்சி நிலையை பிரதமர் அமல்படுத்தினார்.
இதனால் போராட்டத்தின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், முன்பைவிட ஆக்ரோஷமாக எதிர்ப்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தாய்லாந்தில் போலீஸ் தலைமை அலுவலகம், முக்கிய அமைச்சகங்களை முற்றுகையிட்டு நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான இடங்களில் போலீஸார் சம்பவங் களை அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
போலீஸ் தலைமை அலுவலகத்தின் வெளியே இருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடித்து நொறுக்கினர். தொடர் போராட்டங்களால் நாடு முழுவதும் பதற்றம் அதிகரித் துள்ளது.
வரும் நாள்களில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றே தெரிகிறது. பிப்ரவரி 2-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ஷினவத்ரா அறிவித் துள்ளார். எனினும் தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஷின வத்ராவுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. வன்முறையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT