Published : 18 Apr 2017 04:58 PM
Last Updated : 18 Apr 2017 04:58 PM
பாகிஸ்தானின் இஸ்லமாபாத், லாகூர் உள்ளிட்ட இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகியது.
இதுகுறித்து பாகிஸ்தானின் துனியா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "பாகிஸ்தானில் இன்று (செவ்வாய்க்கிழமை) இஸ்லமாபாத், லாகூர் உள்ளிட்ட இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகளால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் கூட்டமாக திரண்டிருந்தனர். இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT