Published : 19 May 2017 04:48 PM
Last Updated : 19 May 2017 04:48 PM
தென் சீன கடலில் கதிர்வீச்சைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை சீன ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க விமானப் படை தரப்பில் இன்று கூறும்போது, ”கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் WC-135 ( கதிர்வீச்சை கண்டறியும் விமானம்) விமானம் சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டு தென் சீனக் கடலில் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சீனாவின் su- 30 ஜெட் விமானம் அமெரிக்க விமானத்தை இடைமறித்தது; இது தொடர்பாக சீனாவிடம் தனிப்பட்ட முறையில் பேசப்படவுள்ளது” என்று கூறப்படுள்ளது.
இது தொடர்பாக மேலும் தகவல்களை அளிக்க அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
மேலும் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடந்தியுள்ளதா என்பதை கண்டறியவும் WC-135 விமானம் பயன்படுத்தப்பட்டது.
வடகொரிய தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை தொடந்து அமெரிக்கா கொரிய தீபகற்பப் பகுதியில் வடகொரியாவவுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT