Published : 30 May 2017 05:35 PM
Last Updated : 30 May 2017 05:35 PM
ரஷ்ய அதிபர் புதின் ஐ.எஸ் தீவிரவாதிகளைவிட ஆபத்தானவர் என்று ட்ரம்ப் கட்சியைச் சேர்ந்தவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கைன் ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஏபிசி செய்தி நிறுவனத்தில் குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் ஜான் மெக்கைன் ரஷ்ய அதிபரால் முன்வைகப்பட்டுள்ள உலகளாவிய பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, "என்னை பொறுத்தவரை ரஷ்ய அதிபர் புதின்தான் உலகளாவிய அச்சுறுத்தல். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைவிட அச்சுறுத்தலானவர் புதின். ரஷ்யாவை பொறுத்தவரை அது ஜனநாயகத்தை அழிக்க முயன்றது. அது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது தொடர்பாக் எந்த ஆதாரமும் இல்லை.
முஸ்லிம் நாடுகளில் நடக்கும் வன்முறைகளை கண்டு நான் வருத்தமடைகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT