Published : 07 Feb 2017 04:41 PM
Last Updated : 07 Feb 2017 04:41 PM
சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரானவர்கள் என்று 13,000 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
சிரிய அரசின் உத்தரவின்படி செத்னயா சிறைச்சாலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் அம்னெஸ்டி நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அம்னெஸ்டி அளித்த தகவலில், "சிரியாவில் கடந்த ஐந்து வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரானவர்கள் என 13,000 பேர் ரகசியமாக தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சித்ரவதை செய்யப்பட்டு, உணவு அளிக்கப்படாமல் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்கள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸின் புறநகரில் புதைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்கள் அனைத்தும் கைதிகள், சிறை அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோரை நேர்காணல் செய்ததன் அடிப்படையில் பெறப்பட்டவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT