Published : 04 Nov 2014 11:16 AM
Last Updated : 04 Nov 2014 11:16 AM
அமெரிக்காவைச் சேர்ந்த நிக் வாலண்டா (35) என்ற சாகச வீரர், சிகாகோ நகரில் சுமார் 500 அடி உயரம் கொண்ட இரு கட்டிடங்களுக்கு இடையே தடிமனான கேபிளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி நடந்துச் சென்றார். அவர் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தினார்.
சிகோகோ நகரில் மெரினா சிட்டி டவர் பகுதியில் 500 அடி உயரம் கொண்ட இரு கட்டிடங்கள் உள்ளன. அந்த கட்டிடங்களுக்கு இடையே 94 அடி தொலைவுக்கு கேபிள் கட்டப்பட்டது. அதில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு அவர் நடந்தார். 94 அடி தொலைவை அவர் ஒரு நிமிடம் 77 விநாடிகளில் கடந்தார்.
அவர் தவறி விழக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் சாகச நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. கையில் பெரிய கம்புடன் அவர் சிறிது தொலைவை கடந்த பின்னரே தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு தொடங்கியது. 2012-ம் ஆண்டில் நயாகரா நீர்வீழ்ச்சியில் இரு கரைகளுக்கு இடையே 1800 அடி தூரத்தை 30 நிமிடங்களில் அவர் கடந்து சாதனை படைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT