Published : 06 Jan 2016 12:39 PM
Last Updated : 06 Jan 2016 12:39 PM
ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்தியதாக வெளியான வட கொரியாவின் அறிவிப்பை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவின் இந்தத் துணிச்சலான அறிவிப்பு சர்வதேச நாடுகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் புதன்கிழமை (இந்திய நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்கள் உட்பட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கின்றனர். இந்த அவசரக் கூட்டம் மூடிய கதவுகளுக்குள் ரகசியமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து வந்த வட கொரியா, கடந்த 2006ஆம் ஆண்டு தனிமைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்றைய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், தொடர்ந்து அதிருப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வட கொரியா தொடர்பாக முக்கிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT