Last Updated : 20 Jun, 2016 11:31 AM

 

Published : 20 Jun 2016 11:31 AM
Last Updated : 20 Jun 2016 11:31 AM

ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: நேபாளத்தைச் சேர்ந்த 14 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகரில் மினி பஸ் மீது தலிபான்கள் நடத் திய தற்கொலைப்படைத் தாக்கு தலில் நேபாளத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காய மடைந்தனர். பலி யானவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத் தால் பாதுகாவல் பணிக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

காபூலில் இருந்து காலை 6 மணிக்கு ஜலாலாபாத் சென்று கொண்டிருந்த மினி பஸ்ஸை வழிமறித்து, தலிபான் தீவிரவாதி ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய் தார். இத்தாக்குதலில், நேபாளத் தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 நேபாளிகள், 4 ஆப் கானியர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஆப்கானிஸ் தான் உள் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காபூலில் சில நிறுவனங் களில் செக்யூரிடிகளாக பணிபுரி வதற்காக ஒரு நிறுவனம் அந்த 14 நேபாளிகளையும் பணியமர்த் தியிருந்தது.

தாக்குதலின் போது ஏற்பட்ட வெடிச்சத்தம் காபூல் முழுக்க கேட்டது. சம்பவ இடத்திலிருந்து கரும்புகை எழுந்தது. குண்டு வெடித்ததும், ஏராளமான ஆம் புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன.

சம்பவம் நடந்த சாலை வெளி நாட்டவர்களும், ராணுவத்தினரும் வசிக்கும் பகுதிகளாகும்.

குண்டு வெடிப்பு காரணமாக சம்பவ இடத்துக்கு அருகே இருந்த கடைகளின் ஜன்னல்கள் உடைந்தன. இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற் றுள்ளது. அதன் செய்தித் தொடர் பாளர் ஸபியுளலா முஜாகித் சமூக வலைத்தளத்தில், “படை களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இத்தாக்குதல் நடத் தப்பட்டதாக” தெரிவித்துள்ளார்.

தலிபான்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவத்துக்கு அனு மதியை அண்மையில் நீட்டித் திருந்தது. இதனிடையே இத்தாக் குதல் நடத்தப்பட்டுள்ளது. ரமலான் மாதம் தொடங்கிய பிறகு காபூலில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஒரு மாதத்துக்கு போர் நிறுத் தத்தை அரசு கோரியிருந்தது. ஆனால், தலிபான்களை இதனை நிராகரித்து விட்டனர். காபூலில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி, தலிபான் கள் நடத்திய தாக்குதலில் 64 பேர் உயிரிழந்தனர். 340 பேர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x