Published : 02 Mar 2017 07:24 PM
Last Updated : 02 Mar 2017 07:24 PM
பாகிஸ்தானின் வடமேற்கு நகரான மர்தானில் தற்கொலைத் தாக்குதல் தீவிரவாதி என சந்தேகித்து வியாபாரி ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
மர்தான் நகர் நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள சோதனைச் சாவடி அருகே சைக்கிளில் வந்த வியாபாரியை நிறுத்துமாறு போலீஸார் உத்தரவிட்டனர். பிறகு வாகனம் ஒன்றினால் அவரது சைக்கிளை இடித்து நிறுத்த முயற்சி செய்தனர், ஆனால் போலீஸார் விடுத்த எச்சரிக்கைக்குப் பணியாத வியாபாரி ஓட முயற்சி செய்ததையடுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி மும்தாஜ் கான் தெரிவித்தார்.
சுட்டுக் கொல்லப்பட்டவரிடமிருந்து எந்த ஒரு ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை.
“ஏன் நிறுத்துமாறு உத்தரவிட்ட பிறகும் எச்சரித்த பிறகும் அவர் ஏன் போய்க்கொண்டேயிருந்தார் என்று தெரியவில்லை. நாங்கள் உரக்க அவருக்கு எச்சரிக்கைகள் கொடுத்து வந்தோம், ஆனால் அவர் பணியவில்லை” என்று மற்றொரு போலீஸ் அதிகாரி ஜேப் பாக்தியார் என்பவர் கூறினார்.
சமீப் காலங்களில் பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல் பெருகி வருவதால் போலீஸார் ஆங்காங்கே உச்சபட்ச எச்சரிக்கையுடன் செயல்பட்டு கடும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT