Published : 23 Feb 2017 05:45 PM
Last Updated : 23 Feb 2017 05:45 PM
சிரியாவில் துருக்கிப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் 56 பேர் பலியாகினர்.
இதுகுறித்து துருக்கி ராணுவ தரப்பில், சிரியாவில் ஐஎஸ் ஆதிக்கம் நிறைந்த பகுதியான அல்-பாப் பகுதியில் அமெரிக்க தலைமையிலான துருக்கிப் படைகள் புதன்கிழமையன்று வான்வழித் தாக்குதல் நடத்தியதில் ஐஎஸ் தீவிரவாதிகள் 56 பேர் பலியாகினர்.
துருக்கி பீரங்கித் தாக்குதலில் ஐஎஸ்ஸின் முகாம்கள் மையமாகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
சிரியாவின் அல் பாப் நகரம் ஐஎஸ் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். கடந்த டிசம்பர் மாதம் முதல் துருக்கிப் படைகள் ஐஎஸ் தீவிரவாதிகள், குர்திஷ் தீவிரவாதிகளை அழிக்க தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
கடந்த வாரம் துருக்கிப் படைகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT