Published : 23 Feb 2017 03:54 PM
Last Updated : 23 Feb 2017 03:54 PM
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடத்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டு வெடிப்பு குறித்து ராணா சனாவுல்லாஹ் கூறும்போது, "லாகூரில் உணவு விடுதியில் வியாழக்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தக் குண்டு வெடிப்பில் உணவு விடுதியிலிருந்த 6 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்தக் குண்டு வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை" என்று கூறினார்.
இந்தக் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில் கடந்த இரண்டு வாரத்தில் நடத்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 150 பேர் பலியாகியுள்ளனர். இந்தக் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தாலிபன்கள் மற்றும் ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT