Published : 26 Mar 2014 03:18 PM
Last Updated : 26 Mar 2014 03:18 PM
இந்திய பெருங்கடலில் ஏற்பட்டிருக்கும் வானிலை மாற்றத்தை அடுத்து விமானத்தை தேடும் பணியை ஆஸ்திரேலியா இன்று மீண்டும் தொடங்கியது.
ஆஸ்திரேலியா முழு தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனுடன் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விமானங்களும் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளன.
இந்திய பெருங்கடலில் வமானத்தின் பாகம் மிதப்பது போன்று கிடைத்த செயற்கைகோள் படத்தின் ஆதாரத்தை கொண்டு மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய கடற்படை தொடங்கியது.
இந்திய பெருங்கடலில் நிலவிய மோசமான வானிலை மற்றும் இருள் சூழல் காரணமாக நேற்று(செவ்வாய்கிழமை) அந்த தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கியது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் பாகங்களைத் தேடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. பெர்த் பகுதியில் இருந்து 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவில் தேடும் பணியில் ரிமோட் மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக மாயமான எம்.எச்.370 மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கி அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா கடல் நடுவில் அமைந்துள்ள கடற்பரப்பில் ஐந்து நாடுகளை சேர்ந்த விமானங்கள் தேடுதலை மேற்கொண்டது.
இந்திய பெருங்கடலில் விமானம் நொருங்கி விழுந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விமானத்தின் பாகங்கள் இருக்கும் கடல்பறப்பை கண்டறிவதில் மிகுந்து சிரமம் ஏற்பட்டது.
நொருங்கி விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டி கடலில் மூழ்கி இருந்தால் அதிலிருந்து வெளிவரும் சிக்னல் உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்க கடற்படை உறுதியுடன் தெரிவித்திருந்தது.
கடலுக்கு அடியில் இருக்கும் கருப்பு பெட்டியின் பேட்டரி ஒரு மாததில் செயலிழந்து விடும். விமானம் கடந்த 8- ஆம் தேதி மாயமான நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் இந்த தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ப்ளுபின் - 21' என்ற, கடலுக்கடியில் தானாக இயங்கி, கருப்பு பெட்டியை கண்டறியும் கப்பல் இன்று ஆஸ்திரேலியாவுக்கு விரைகிறது. இந்த கப்பல், 14,700 அடி ஆழம் வரை சென்று, கறுப்பு பெட்டியை ஓரிரு நாளில் கண்டறியும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சர், ஜி ஹாங்ஷெங் குறிப்பிடுகையில், ''விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான, செயற்கைக் கோள் தகவல்கள் அனைத்தையும், மலேசிய அரசு தர வேண்டும். விமானத்தை கண்டுபிடிக்கும் வரை, தேடுதல் பணியை நிறுத்தக் கூடாது. சீனாவின் சார்பில் ஆறு கப்பல்களும், இரண்டு விமானங்களும் தொடர்ந்து தேடும்'' என்றார்.
மலேசிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஸ்காமுதின் ஹூசைன் கூறுகையில், ‘‘சீன செயற்கைகோள் அனுப்பியுள்ள படத்தில் விமானத்தின் பாகம் உள்ளதாக ஒரு உத்தேசம் மட்டுமே ஏற்பட்டுள்ள நிலையில் தேடல் தொடங்கியது. எனினும் விமானத்தின் நிலை என்ன என்பதினை தீர்மானிக்கு பொருட்டு சர்வதேச செயற்கைக்கோள் மற்றும் விமானம் செயல்திறன் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT