Published : 26 Sep 2016 05:14 PM
Last Updated : 26 Sep 2016 05:14 PM
இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.
இராக் தலைநகர் பாக்தாத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிரவாதி ஒருவர் தனது உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 6 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் அடுத்த மாதம் கொண்டாடப்படும் மொஹரம் பண்டிக்கையை முன்னிட்டு முகாமிட்டிருந்த ஷியா சமூகத்தினரை குறிவைத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT