Published : 25 Nov 2014 09:25 AM
Last Updated : 25 Nov 2014 09:25 AM
பிரான்ஸில் மேற்குப் பகுதியில் பிரிட்டெய்ன் எனும் இடத்தில் புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 250 கிலோ எடையுள்ள வெடிக்காத வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அந்நகரத்தின் மேயர் நதாலி அப்பெர் கூறும் போது, "இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்வது நிபுணர்களுக்கு மிகவும் கடினமான பணியாக இருந்தது. காரணம் இது இன்றைய வெடிகுண்டுகளைப் போல 'ரோடியோ கன்ட்ரோல்ட்' குண்டுகள் அல்ல. கருவிகளின் துணையில்லாமல் மனிதக் கைகளாலேயே இந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது" என்றார். இதை முன்னிட்டு அந்நகரத்தில் உள்ள மக்கள் எல்லோரும் காலை 9 மணி அளவில் அந்நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உலகப் போர்களின் போது இந்த நகரம் பல முறை குண்டுவீச்சுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT