Last Updated : 13 Sep, 2016 02:37 PM

 

Published : 13 Sep 2016 02:37 PM
Last Updated : 13 Sep 2016 02:37 PM

அமெரிக்க தாக்குதலில் ஐஎஸ் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டார்: உறுதி செய்த பென்டகன்

கடந்த மாதம் வடக்கு சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ். தலைவரும், செய்தித் தொடர்பாளருமான அபு மொகமது அல் அத்னானி கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகம் பென்டகன் உறுதி செய்தது.

ஆகஸ்ட் 30ம் தேதி அபு மொகமது அல் அத்னானி காரில் சென்று கொண்டிருந்த போது அமெரிக்காவின் பிரிடேட்டர் ட்ரோன், ஹெல்ஃபயர் ஏவுகணையை வீசியதில் அவர் கொல்லப்பட்டார் என்று பென்டகன் திங்களன்று தெரிவித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பின் பிரதான செய்தித் தொடர்பாளரும், கடந்த ஒரு மாதத்தில் ஐஎஸ் நடத்திய பல தாக்குதல்களின் பின்னணியில் செயல்பட்டவருமாவார் அத்னானி.

பாரீஸ், பிரஸல்ஸ், இஸ்தான்புல், வங்கதேச கஃபே தாக்குதல் சினாயில் ரஷ்ய விமானத்தை வீழ்த்தியது அங்காராவில் பேரணி ஒன்றில் தற்கொலைத்தாக்குதல் ஆகியவற்றின் மூளையாகச் செயல்பட்டவர் அத்னானி என்று பென்டகன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்னானி தாக்குதலில் பலியான செய்தி தெரிந்தவுடன் ரஷ்யா தாங்கள்தான் அவரை வீழ்த்தினோம் என்று கூறியதை ‘ஜோக்’ என்று பென்டகன் வர்ணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x