Last Updated : 04 Nov, 2014 12:56 PM

 

Published : 04 Nov 2014 12:56 PM
Last Updated : 04 Nov 2014 12:56 PM

தீவிரவாதிகள் உதவியுடன் இந்தியா மீது மறைமுகப் போர் தொடுக்கும் பாகிஸ்தான்: அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிக்கை

இந்திய ராணுவத்துக்கு எதிராக மறைமுகமாக போரிட தீவிரவாதிகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

பென்டகன் சார்பில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

இந்திய ராணுவத்தின் பலத்தை எதிர்கொள்ள முடியாத நிலையிலும், ஆப்கானிஸ்தானில் தனது செல்வாக்கை நிலைநாட்ட முடியாமலும் பாகிஸ்தான் உள்ளது. தீவிரவாதிகளை பயன் படுத்தி பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ் தானில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவுவோம் என அறி விக்கும் பாகிஸ்தான், அதற்கு முரணான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மே மாதம், இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவிருந்த சூழ்நிலை யில், ஆப்கனின் ஹெராட் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை தீவிரவாதிகள் தாக்கினர். இந்து தேசிய வாதக் குழுக்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறியப் படும் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அந்த தாக்குதலுக்கு பாகிஸ் தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று நாங்கள் (பென்டகன்) அறிவித் தோம். இதையடுத்து இந்தியா வுக்கு ஆதரவாகவும், தீவிரவாதி களின் செயலை கண்டித்தும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் கருத்து வெளியிட்டார்.

மத்திய ஆசியாவில் பொருளா தார முன்னேற்றம் ஏற்பட வேண் டும் என்ற நோக்கத்திலும், ஆப்கா னிஸ்தானில் பாதுகாப்பும், ஸ்திரத் தன்மையும் ஏற்படவேண்டும் என்ற குறிக்கோளுடனும் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம், பாதுகாப்பு, சட்டஅமலாக்கம் ஆகிய துறைகளில் ஒத்து ழைப்பு அளிப்பது தொடர் பாக இந்தியாவும், ஆப்கானிஸ் தானும் கடந்த 2011-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x