Published : 22 Jun 2017 08:43 PM
Last Updated : 22 Jun 2017 08:43 PM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 34 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் போலிஸார் தரப்பில், "ஆப்கனிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தின் (வியாழக்கிழமை) லஷ்கர்ஹ் நகரத்திலுள்ள வங்கியில் மதியம் 12 மணியளவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் பலியாகினர். 64 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது" என்றனர்
தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்ட லஷ்கர்ஹ் பகுதியில் தாலிபன்களுக்கு எதிராக அமெரிக்கப் படையும், ஆப்கான் படைகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT